Tuesday, 19 February 2013

நாட்ல என்ன நடந்தா நமக்கு என்ன

நமக்கு நம்ம சந்தோசம் தான் முக்கியம். யார் எப்படி நாசமா போனா தான் என்ன. இருக்குறது ஒரு life. Enjoy பண்ணுவோம்.

 பெட்ரோல் விலை ஏறிகிட்டே இருக்கு. Demand தான் காரணம். So what? I have a job. I have good salary. I will buy a bike. I can afford. அடுத்தவனால வாங்க முடியலனா எனக்கு என்ன.

பெட்ரோல் விலை ஏறுனா டீஸல் மட்டும் சும்மாவா இருக்கும். அதுவும் தான் ஏறுது. டீஸல் விலை ஏறுனா பால், பருப்பு, பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட், லொட்டு லொசுக்கு எல்லாம் தான் ஏறும். ஏழ பணக்காரன் எல்லாரும் தான் பாதிக்கபடுவான். So what? டீஸல் அதிக mileage தரும். Its slightly cheaper than petrol. I will buy a diesel car. I can afford. அடுத்தவனால சோறு வாங்க முடியலனா எனக்கு என்ன.

 நான் Corporate-ல work பண்றேன். Paper cup and Tissues are good to use. எவன் கப்பையும் kerchief-உம் தூக்கிட்டு சுத்துவான். எத்தன லட்சம் மரம் அழிஞ்சா எனக்கு என்ன.
5 வருஷத்துக்கு ஒரு தடவ தேர்தல் வருது. அதுக்காக ஊருக்கு பொய் வோட்டு போடா முடியுமா. எவன் ஆட்சிக்கு வந்தா எனக்கு என்ன.

எனக்கு சினிமாவும் கிரிக்கெட்டும் தான் முக்கியம். மாசத்துல இதுக்காக நிறைய நேரமும் பணமும் செலவு பண்ணுவேன். இல்லாதவங்களுக்கு உதவியா? நான் ஏன் பண்ணனும்? அதுக்கு நிறைய பேர் இருக்காங்க. ஏன் சம்பளத்த என் சந்தோசத்துக்கு தான் செலவு பண்ணுவேன். யார் எப்டி போன எனக்கு என்ன.

மண்ணெண்ன வெளக்கென்ன வேப்பெண்ண எவன் எக்கேடு கேட்டு போன எனக்கென்ன

No comments:

Post a Comment